News

ஸ்டாலினுக்கு 5 வியூக வகுப்பாளர்கள்..? குழப்பத்தில் அமைச்சர்கள்.

Follow Us

வரும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தால், அவரது மந்திரி சபை எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு டிரோல் செய்து திமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ளது. இதை பார்த்து அதிமுகவினர், ‘’எப்படியோ அடுத்தது அதிமுக ஆட்சி என்பதையாவது திமுக ஒப்புக்கொண்டதே, அது போதும்’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

அதிமுகவை கிண்டல் செய்து திமுகவினர் வெளியிட்டிருக்கும் பட்டியல் இது. அதன் படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு துணை முதல்வராக நயினார் நாகேந்திரனும், அன்புமணி ராமதாஸும் இருப்பார்கள். இதையடுத்து முக்கிய அமைச்சர்களாக பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஏசி சண்முகம், டிடிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருப்பார்கள் என்று படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார்கள்.

திமுகவினர் இது குறித்து, ‘’எடப்பாடி டிரைவர் சீட்டுல இருப்பாரு. நயினாரு வலதுபக்கமா வட்டையத்திருப்புவாரு. அன்புமணி இடதுபக்கமா வட்டையத்திருப்புவாரு. பிரேமலதா பிரேக்குல கால் வச்சுருக்கும். ஓபிஎஸ்ஸூக்கு கிளட்ச் தினகரனுக்கு ஆக்சிலேட்டர் ஏ.சி. சண்முகம் ஹாரன் அடிப்பாரு. மொத்தத்துல கொண்டு போய் கவுத்திருவாங்க. ஜி.கே.வாசன் கவுந்த வண்டியை தூக்குறதுக்கு ஆள் கூப்பிட சைக்கிளிலில் கிளம்பிருவாரு’’ என்று பதிவு போடுகிறார்கள். அது மட்டுமின்றி, இதெல்லாம் பா.ஜ.க.வின் வேலை என்றும் அவர்களே போட்டு விடுகிறார்கள்.

இதுபோன்ற பதிவு போட்டதும் கொந்தளிக்க வேண்டிய அதிமுகவோ, ‘’இது கிண்டல் என்றாலும் அடுத்தது அதிமுக ஆட்சி என்பதை ஒப்புக்கொண்டார்களே, அந்த வகையில் சந்தோஷம்…’’ என்கிறார்கள்.

தங்கள் பதிவு பூமராங் ஆனதை நினைத்து திமுகவினர் கையைப் பிசைகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link