Share via:
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய சென்னை கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி மிகவும் தெளிவாகப் பேசிவிட்டார். அதாவது தலைமைக் கழகத்தை உடைத்தவர்களை
சேர்க்க மாட்டோம். 18 எம்.எல்.ஏ.க்களை இழுத்துச்சென்றவர்களை சேர்க்க மாட்டோம் என்று
உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் டெல்லிக்குப் போயிருக்கும் இபிஎஸ், அங்கேயும் இதே
கெத்தோடு நடந்துகொள்வாரா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.
நேற்றைய இபிஎஸ் பேச்சு குறித்து அவாது ஆதரவாளர்கள், ‘’இபிஎஸ் பேசியதில்
ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் என யாருக்காகவும், அதிமுக
சமரசம் செய்துக்கொள்ளாது என்பதோடு, செங்கோட்டையன் போன்றவர்கள் எத்தனை கெடு விதித்தாலும்
அதை எல்லாம் அதிமுக கண்டுக்கொள்ளாது என்பது உறுதியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்லாது, ஒரு செங்கோட்டையன் கட்சியை விட்டுப் போனால்,
இன்னொரு செங்கோட்டையனை அதிமுக உருவாக்கும் என்பதும் இன்றைய அவரின் பேச்சின் மூலம் புரிந்துக்கொள்ள
முடிகிறது.
ஓ.பி.எஸ் பின்னால் ஒரு 1% பேர் இருப்பார்கள், தினகரன் பின்னால்,
அவர் 2021ல் பெற்ற 2.3% வாக்கு வங்கியில் பாதிபேர் கூட இப்போது இருக்கமாட்டார்கள்.
இவர்களை இணைப்பதும் ஒன்றுதான், இணைக்காமல் பயணிப்பதும் ஒன்று தான்’’ என்று குஷியாகியுள்ளனர்.
இந்நிலையில் டெல்லிக்குப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அங்கேயும்
போய் இதே உறுதியோடு பேசுவாரா என்பதே கேள்வி. ஆட்சியை விட தன்மானமே முக்கியம் என்பதை
டெல்ல்லியிலும் பேசிவிட்டால் இபிஎஸ் மீது அவரது கட்சியினர் நம்பிக்கை அதிகரித்துவிடும்.
செய்வாரா என்று பார்க்கலாம்.