Share via:
எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் எழுச்சிக் கூட்டங்களில் ஏதேனும்
ஒரு தேர்தல் அறிவிப்பு வெளியிடுகிறார். அந்த வகையில் ஆட்டோவுக்கு மானியம் தரப்படும்
என்று அறிவிப்பு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் அமித்ஷா கூட்டணி ஆட்சி
என்று தொடர்ந்து குண்டு போட்டுக்கொண்டே இருக்கிறார்.
இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று
திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார். எடப்பாடி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக
ஆட்சியமைக்கும் என்று சொல்கிறார், இதை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் அமைக்கிற தனிப்பெரும்பான்மை
ஆட்சியில் கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் பங்கு பெறுமா? குறிப்பாக பாஜக அமைச்சரவையில்
பங்கெடுக்குமா?’’ என்று கேட்கிறார்கள்.
அதேபோல், அதிமுக ஆட்சி அமைந்ததும், பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு
₹75,000
மானியமாக வழங்கப்படும் என எடப்பாடியார் செய்திருக்கும் அறிவிப்பு ஆட்டோ ஓட்டுநர்களை
குஷிப்படுத்தியிருக்கிறது.
இந்த அறிவிப்பு, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு
நேரடியாக உதவும் மிகப்பெரிய நலத்திட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில்
சுமார் 2.6 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் சுமார் 3.2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள்
உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஓட்டுநர்கள் உள்ளனர்.
அதேபோல, மதுரையில் சுமார் 30,000 ஓட்டுநர்களும், கோவையில் சுமார்
35,000 ஓட்டுநர்களும், திருச்சியில் சுமார் 20,000 ஓட்டுநர்களும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், அதனால் மட்டும் ஏற்படும் மொத்த நிதி சுமை சுமார்
₹2 ஆயிரம்
கோடி முதல் ₹2,500 கோடி வரையாக இருக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம், இந்தத் திட்டம் பல நடுத்தர மற்றும் வாடகை ஆட்டோ ஓட்டும்
ஓட்டுநர்களின் கடன் சுமையை குறைக்கும். வாடகை சுமையை குறைக்கும். சொந்தமாக ஆட்டோ வாங்க
உதவும். அதோடு, கூடுதல் செலவாக அவர்களுக்கு இருக்கும் குடும்பப் பராமரிப்பு, கல்வி,
மருத்துவம், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளையும் குறைக்கும்…’ என்கிறார்கள்.