Share via:
இன்று மாலை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரசாரக் கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமிக்கு செம மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. மோடிக்கு இணையாக இபிஎஸ் படம்
மேடையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று, ‘’மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில்
நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது…’’
என்று ட்வீட் போட்டு முன்னோட்டம் கொடுத்துள்ளார்.
இன்று சுமார் 5 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, அமமுக, பாமா, தமாக,
ஐஜேகே, புதிய நீதி கட்சி பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்திற்கு தேதிமுகவை வரவழைக்கும் முயற்சி நடந்துவருகிறது.
அதேநேரம், பன்னீர்செல்வத்தின் நிலைமையே பரிதாபமாக மாறியிருக்கிறது.
திமுகவில் நல்ல பதவி கொடுத்தால் இணைவதற்குத் தயார் என்று பன்னீர்
விடுத்த வேண்டுகோளை திமுக ஏற்கவில்லை. அதேபோல் அதிமுகவில் இணைப்பதற்கு எடப்பாடியும்
தயாராக இல்லை. இத்தனை நாட்களும் பாஜக சொல்வதைக் கேட்டு நடந்துவந்த பன்னீர் இப்போது
என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்.
இன்றைய மோடி விசிட் பன்னீருக்கு ஃபைனல் ரிசல்ட் சொல்லிவிடும் என்கிறார்கள்.
