Share via:
தமிழ்நாட்டில்
சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழகம்
முழுக்க இருக்கும் நிர்வாகிகளை ஒன்று திரட்டுவதற்கும் ஒரு யாத்திரை நடத்த இருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை செல்ல இருப்பதாகத்
தெரிகிறது.
தமிழ்நாட்டில்
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி
தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார்.
கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது.
இப்போது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கு கடுமையாக முயற்சி செய்துவருகிறார்.
பாமக, தேமுதிக
ஆகிய கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இப்போது
ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் விஜய்க்குச் செல்லாம் தங்கள் பக்கம் மக்களை திசை
திருப்ப வேண்டியது எடப்பாடிக்குக் கட்டாயமாகிறது. ஆகவே, தமிழகம் முழுக்க இருக்கும்
நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும், நம்பிக்கையூட்டவும் நடைபயணம்
மேற்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்.
அண்ணாமலை
பாணியில் தமிழகம் முழுக்க எழுச்சியூட்டும் நடைப்பயணமாக அமையும் என்கிறார்கள். அதற்கேற்ப
234 தொகுதிகளையும் தொட்டுவரும் வகையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் வகையில் நடைபயணத்துக்குத்
திட்டமிடப்பட்டு வருகிறது. மக்கள் யாத்திரை என்று இப்போது பேர் சூட்டப்பட்டுள்ளது.
இதை இன்னமும் சிறப்பான பெயராக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும்
ஜூலை மாதம் முழுக்க நடைபயணம் தமிழகம் முழுக்க நடைபெறும் என்று தெரிகிறது. இந்த விவகாரம்
திமுக மற்றும் விஜய் வட்டாரத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து
விஜய் தொடங்கியிருக்கும் சுற்றுப்பயணத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.