Share via:
பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வரயிருக்கும் நிலையில், அவருடன்
கூட்டணித் தலைவராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக பா.ஜ.க.வில் கடும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில்
செயல்பட்டு வந்தாலும் அவர் விரும்பிய தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பா.ஜ.க.
முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்த கிருஷ்ணசாமி, சென்னை பசுமை
வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்றுசந்தித்து பேசினார்.
இருவரும் கூட்டணி மற்றும் தொகுதி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, அதிமுக
கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணையவுள்ள நிலையில், புதிய
தமிழகம் கட்சியும் இணைவது உறுதியாகியுள்ளது.
பா.ஜ.க.வில் ஜான் பாண்டியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிருஷ்ணசாமிக்கு
உடன்பாடு இல்லாமலே அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மெகா கூட்டணிக்கு
ஆட்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.