News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அ.தி.மு.க.வில் சரவணன், பா.ஜ.க. கூட்டணியில் ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இதில் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2 லட்சத்து 04 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 92 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றது.

அண்ணா தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் மதுரையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் தான், இந்த தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட நிர்வாகிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அப்போது முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி சில கேள்விகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, மதுரையில் பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்தோம். கேட்கப்பட்ட எல்லா திட்டங்களும் செய்து கொடுத்த போதிலும், ஏன் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை. 3 வது இடத்திற்கு ஏன் சென்றது என்பது குறித்து செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி கேட்டதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடியின் இந்த கேள்விக்கு செல்லூர் ராஜூ மற்றும் மதுரையை சேர்ந்த பிற மாவட்ட நிர்வாகிகள் பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காத்ததாகக் கூறப்பட்ட நிலையில் இன்று வெளிப்படையாக இதுகுறித்துப் பேசியிருக்கிறார் செல்லூர் ராஜூ.

‘’மதுரைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துட்டு ஏன் ஓட்டு வரலைன்னு கேட்டா என்ன சொல்றது? நாங்க என்ன எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா..? நாங்களும் தெருத்தெருவா சரவணனுக்காக பாடுபட்டோம். ஆனால், மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வேண்டாம்னு ஓட்டு போட்டிருக்காங்க. சிறுபான்மை மக்கள் ராகுல் காந்திக்குப் போட்டிருக்காங்க.

மதுரையாவது பரவாயில்லை, மூணாவது இடத்துக்கு வந்துட்டோம். நிறைய இடத்துல டெபாசிட் போயிடுச்சு. இதுக்கு என்ன சொல்றது?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையிலே செல்லூர் ராஜூ இத்தனை தைரியமாகப் பேசுவதாகச் சொல்கிறார்கள். தன்னையே கேள்வி கேட்கும் செல்லூர் ராஜூ மீது எடப்பாடி ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link