Share via:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும்,
அந்த கட்சிக்கு 36% வாக்கு வங்கி இருக்கிறது. இந்த வாக்கு யாருக்குச் செல்லும் என்பது
தான் இப்போது கேள்வியாக மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் மூவ் அன்புமணிக்கு
ஆப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும்
பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுகவினர் கட்சிக் கரை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள்
என்று செய்திகள் வெளியாகின. அதோடு, அன்புமணியும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை
போட்டு மாம்பழத்துக்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
இந்த விஷயம் தான் எடப்பாடி பழனிசாமிக்கு கோபத்தை உண்டாக்கியதாக
சொல்லப்படுகிறது. இதையடுத்தே, அ.தி.மு.க.வின் ஒரு ஓட்டு கூட பா.ம.க.வுக்குப் போகக்கூடாது’
என்று மாவட்டச் செயலாளர் மூலம் கிளைக்கழகச் செயலாளர்களுக்கும் வட்டச் செயலாளர்களுக்கும்
வாய்மொழி உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது.
அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவு தருகிறாரா
என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ம.க.வை விட சீமான் அதிக வாக்குகள் வாங்குவது நல்லது என்ற
முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறாராம்.
எப்படியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு
சேர்வதற்கு ராமதாஸ் வருவார் என்றே கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த நேரத்தில்
விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றிருந்ததைக் காட்டி அதிக சீட் பேரம் பேசுவார்
என்பதால், அதை கட்டுப்படுத்தவே சீமானுக்கு ஆதரவு தரும் முடிவு எடுத்தாராம். .
தேர்தலில் நிற்கவில்லை என்றாலும் வாக்குப்பதிவு நேரத்தில் பெரும்பாலார்
வாக்களிக்கவே ஆசைப்படுவார்கள். இந்த வாக்குகளை கவர்வதற்கு தி.மு.க.வினர் முயற்சி செய்வார்கள்.
இதை முறியடிக்க வேண்டும் என்றால் யாரேனும் ஒரு நபரை சுட்டிக்காட்ட வேண்டுட்ம். எனவே,
அ.தி.மு.க.வினர் போடும் வாக்கு சீமானுக்குப் போகலாமே தவிர, அன்புமணிக்குப் போகக்கூடாது
என்றே உத்தரவு போட்டிருக்கிறாராம்.
இந்த விவகாரம் தெரிந்து சீமான் குஷியில் இருக்கிறார். அதேநேரம்,
அன்புமணி கடும் ஆவேசம் அடைந்திருக்கிறார். அதனாலே இப்போது மேடைகளில் தி.மு.க., மற்றும்
அ.தி.மு.க.வை விட சீமான் கட்சியை அதிகம் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள்.
அன்புமணியை கதறவிடுவதே எல்லோருக்கும் வேலையாப் போச்சு.