Share via:
காங்கிரஸ் ஆட்சியை இழந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியும் நேரத்தை
வீணடிக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு நேரம் நெருங்கிவிட்டது என்று செல்வப்பெருந்தகை
பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இணக்கம் நிலவி வந்த நிலையில்,
சவுக்கு சங்கர் கைது நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கரை வெளியே கொண்டுவருவதற்கு
சவுக்கு சங்கரின் உறவினரும் காங்கிரஸ் வேட்பாளருமான சசிகாந்த் செந்தில் தீவிரமாக களம்
இறங்கினார். அவருக்காக செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான மோகன் குமாரமங்கலம் பேசினார்.
ஆனால், இந்த விஷயத்தில் தி.மு.க. உறுதியாக நின்றது. இப்போது சவுக்கு
சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு மேலும் பிடி இறுகியிருக்கிறது. அதோடு அவரது
சொத்துக்களையும் முடக்குவதற்கு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விவகாரத்தை அடுத்து செல்வப்பெருந்தகை திடீரென தமிழகம் முழுவதும்
சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கிவிட்டார். அதோடு, இனியும் ஏமாற மாட்டோம். காங்கிரஸ் ஆட்சி
அமைக்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தி.கு.க.வினருக்கு கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பிறகும் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.
கூட்டணியில் தொடர மாட்டார் என்பதால், அதிக சீட் வாங்குவதற்கு வசதியாக அ.தி.மு.க. கூட்டணியில்
இடம்பெற முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள். அதுசரி, ராகுல் இதை ஏற்றுக்கொள்ள மாட்டாரே
என்று கேட்டால், மக்களவைத் தேர்தல் முடிவைப் பொறுத்தே இந்த மாற்றம் அமையும் என்கிறார்கள்.