Share via:

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டே
இருந்த எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அமித்ஷாவுடன் ஒரே மேடையில் காட்சி
அளித்துவிட்டார். இது குறித்து எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப்
புள்ளிகளை வரவழைத்து சமாதானம் செய்தும் அனுப்பிவிட்டார். இப்போது அ.தி.மு.க. பெரும்பான்மை
பெரும் வகையில் தேர்தலில் நிற்பதற்குத் தேவையான திட்டமிடலில் சீரியஸாக எடுக்கிறார்
எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் அமித்ஷா தெரிவித்தார்
என்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி
தெளிவாக உள்ளார். இதற்கு குறைந்தது 170 தொகுதிகளில் அ.தி.மு.க. நிற்க வேண்டும் என்று
கணக்குப் போட்டுள்ளார்.
இந்த முறை பா.ஜ.க.வினர் தங்களுக்கென 50 சீட்டும் கூட்டணிக்கு என
50 சீட்டும் கேட்டுவருகிறார்கள். இந்த கணக்கில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக
134 தொகுதியில் மட்டுமெ நிற்க முடியும். இப்படி நின்றால் தனிப்பெரும்பான்மை கிடைப்பதற்கு
வாய்ப்பு இல்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி 170 தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக 179 சட்டமன்றத் தொகுதிகளில்
களமிறங்கியது. கடந்த தேர்தல் அளவுக்கு இல்லை என்றாலும் 170 என்பதில் எடப்பாடி உறுதி
காட்டுகிறார். அதேநேரம் கூட்டணிக் கட்சியினருக்கு 80 முதல் 100 தொகுதிகள் கட்டாயம்
வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். யாருடைய பிடிவாதம் ஜெயிக்கிறது என்று
பார்க்கலாம்.