Share via:
சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை,
கரூரில் இருக்கும் அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்துத்திரும்பினார் எடப்பாடி
பழனிசாமி. அவருடன் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் உடன் சென்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் எடப்பாடி பழனிசாமியும் மற்ற தலைவர்களும்
சேர்ந்து அந்நியோன்யமாகக் காட்சியளித்தார்கள். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய
எடப்பாடி பழனிசாமி, ‘’திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு
அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது
வாடிக்கையாகி இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது…’’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் என்று அவருடன்
அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நெருக்கியடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும்
அதன் கீழே தி.மு.க. குடும்பம் என்று கருணாநிதி உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட
புகைப்படத்தையும் பகிர்ந்து அ.தி.மு.க.வினர் டிரெண்டிங் ஆக்கிவருகிறார்கள்.
கருணாநிதியின் குடும்பத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள்
மட்டுமே நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். அந்த போட்டோவில் வேறு யாருக்கும் இடமே
இல்லை. அது ஒரு குடும்பக் கட்சி என்பதை சொல்லாமல் சொல்கிறது அந்த புகைப்படம். அதேநேரம்,
அ.தி.மு.க. என்பது ஜனநாயகக் கட்சி யாரும் தலைவருக்கு அருகே சமமாக உட்கார முடியும் என்கிறது
எடப்பாடி பழனிசாயின் படம்.