Share via:
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி
பழனிசாமி உறுதியுடன் இருந்துவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலையைத்
தொடரவிரும்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் சேர்ப்பதற்காகவே
சேலம் இளங்கோவன் மற்றும் வைத்திலிங்கம் ரெய்டுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடியின் வலது கரமாக சேலம் இளங்கோவன்
இயங்கிவருகிறார். திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்ஐடி காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர்
அண்ட் கல்லூரி ஆர்.இளங்கோவனின் மகன் பீரவின் குமார் தலைமையில் இயங்கி வருகிறது. இங்கு
திருச்சி வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு
சொந்தமான 1 ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், 2.அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ்
பிரைவேட் லிமிடெட், 3.ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும்
வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் தலைமையின் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை
இழந்து வந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்படலாம் என்ற முடிவு
எடுத்ததாக தெரிகிறது. இப்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. தஞ்சாவூர்
மாவட்டத்தின் தவிர்க்க முடியாத சக்தி வைத்திலிங்கம். அவர் எடப்பாடியுடன் இணைந்துவிடக்
கூடாது என்பதற்காகவும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.க.வின் பாச்சா பலிக்குமா என்று பார்க்கலாம்.