News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு செய்தி பரவியிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று ஆறுதல் கூறிய விவகாரம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜாமீன் கேட்டு முறையிட்டதில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது  அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ’’எம் ஆர் விஜயபாஸ்கர் மீது திட்டமிட்டு புனையப்பட்ட பொய் வழக்கு இதுகரூர் திமுக அமைச்சர் சிறையில் இருப்பதால், அதனை மறைக்கும் பொருட்டு, இந்த பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், இதற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்”” என்று கூறியிருந்தார்.

தமிழகம் முழுக்க தி.மு.க.வின் மின்கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் யாரும் போராட்டம் நடத்தவில்லை. விஜயபாஸ்கர் முன் ஜாமீன் வாங்குவதற்கு தலைமறைவாக இருந்த நிலையில், அவரது ஆதரவாளர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தடுத்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து விஜயபாஸ்கரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின இவை எல்லாமே வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிபடுத்தவுமே இந்த சந்திப்பு நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link