Share via:
கால் மூட்டுவலி காரணமாக அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகவில்லை
என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் சுவாமி திருக்கோயில்
அன்னதர்மத்தை தொடங்கிவைத்து அய்யா வழி அன்புக்கொடி மக்களிடம் கலந்துரையாடினார்.
அய்யா வழி கோயிலுக்குச் செல்பவர்கள் மேல் சட்டையைக் கழட்டிவிட்டுச்
செல்ல வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி மேல் சட்டை இல்லாமல் தலையில் தலைப்பா கட்டி
சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்
குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு போன்றவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தொகுதி பங்கீட்டுக் குழுவில் கேபி.முனுசாமி, திண்டுக்கல்
சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அடுத்தபடியான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன்,
பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயகுமார், சிவி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன்,
ஆர்.பி.உதயகுமார், வைகைசெல்வன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
தேர்தல் பிரசாரக் குழுவில் தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய்சுந்தரம்,
செல்லூர் கே.ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன்
ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தேர்தல் விளம்பரக் குழுவில் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர
பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேணுகோபால், பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, அப்துல் ரஹீம்,
ராஜ் சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தனை பேர் நியமிக்கப்பட்ட பிறகும் எந்த கட்சியுடன் தொகுதி பேச்சுவார்த்தை
நடத்தப்போகிறார்கள் என்பதுதான் சிதம்பர ரகசியமாக இருக்கிறது.