News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்னரே, மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜனுக்காக ஓட்டுக் கேட்ட எடப்பாடி பழனிசாமியின் செயல் தமிழக பாஜகவில் படும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் களத்தில் இறங்க முடியாத வகையில் தொகுதிப் பங்கீடு முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு கடினமான தொகுதிகளை எல்லாம் தள்ளிவிட்டு, சுலபமான தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொண்டதாக பாஜகவினர் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அதில், 13 அமைச்சர் தொகுதிகள், ஒரு சபாநாயகர் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக. இதில், அதிகப்படியான அமைச்சர் தொகுதிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குன்னம் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ஒட்டன்சத்திரம் – அமைச்சர் சக்கரபாணி

ஈரோடு (மேற்கு) – அமைச்சர் முத்துசாமி

ராணிப்பேட்டை – அமைச்சர் ஆர்.காந்தி

சைதாப்பேட்டை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மன்னார்குடி – அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

பாமக; சேலம் (வடக்கு) – அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்

திருப்பத்தூர் – அமைச்சர் பெரியகருப்பன்

திருச்செந்தூர் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

பத்மநாபபுரம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவடி – அமைச்சர் நாசர்

திருவண்ணாமலை – அமைச்சர் எவ வேலு

ராசிபுரம் – அமைச்சர் மதிவேந்தன்

ராதாபுரம் – சபாநாயகர் அப்பாவு

இந்த ஒதுக்கீட்டில் தினகரன் கட்சி கரை சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. அதூம் அமமுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரியகுளம்,மன்னார்குடி, திருவையாறு, திருப்பத்தூர், சைதாப்பேட்டை தொகுதிகளை கடந்த முறை திமுக 20ஆயிரம் முதல் 53ஆயிரம் வரை வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தது. 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசிடம் தோல்வியடைந்த காரைக்குடி தொகுதியை பாஜகவும்,16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த நாங்குநேரி தொகுதியை அதிமுகவும், கமுக்கமாக, அமமுக பக்கம் தள்ளிவிட்டுருக்கிறது. இதைவிடவும் கொடூரம் என்னவென்றால் திருச்சி மேற்கு மற்றும் பூவிருந்தமல்லி தொகுதியை அமமுக பக்கம் தள்ளிவிட்டது தான். திருச்சி மேற்கில் திமுக-வின் கே.என். நேரு 85ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், பூவிருந்தமல்லியில் அண்ணன் கிருஷ்ணசாமி 94ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வென்றிருந்தனர்… ஆக, தொகுதிப் பங்கீடு என்ற பெயரில் கூட்டணிகளுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறார்’’ என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link