News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்தியாவிலே தமிழகத்துக்கு என்று தனித்தன்மை உண்டு. சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் இருப்பதாலே இந்திய தேர்தல் வெற்றிக்கும் தமிழக தேர்தல் வெற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இது கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பளீச்சென தெரிந்தது.

2024 தமிழக தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கிறது. தி.மு.க. அதன் வழக்கமான கூட்டணிக் கட்சிகளுடன் களம் இறங்கியிருக்கிறது. பா.ஜ.க.விடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும் புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தியும் நிற்கிறார்கள். மீதமுள்ள அத்தனை உதிரிக்கட்சிகளையும் ஒன்றிணைத்து பா.ஜ.க. கூட்டணி களம் காண்கிறது.

திமுக வேட்பாளர்கள் நிற்கும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள்.

அதேநேரம், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மட்டும் கடும் போட்டியை சந்திக்கிறார்கள்.

 தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர், கடலூர், கரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி, ஆகிய 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எளிதாக வெற்றி பெறும். நெல்லை, புதுவை, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஜெயிக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நிற்கிறார்கள். வழக்கம்போல் திருமாவளவன் கடுமையான போட்டிக்கு இடையில் வெற்றி அடைகிறார். ரவிக்குமார் எளிதாக வெற்றி அடைகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் நாகப்பட்டினம் தொகுதியில் வி. செல்வராஜ், திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் ஆகியோர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் வேட்பாளர்கள் திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் மதுரையில் சு.வெங்கடேசனும் வெற்றியைத் தொடுகிறார்கள்.

அதோடு திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ, ராமநாதபுரத்தில் நவாஸ்கனி, கொங்கு கட்சியின் நாமக்கல் மாதேஸ்வரன் ஆகியோரும் எளிதாக வெல்கிறார்கள்.

ஆக, தி.மு.க. கூட்டணி 40க்கு 38 இடங்களில் எளிதாக வெல்கிறது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் வெல்வதற்கு தி.மு.க. அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இன்றைய நிலையில் தி.மு.க. அலை அடிக்கிறது. ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளையும் வென்றாலும் ஆச்சர்யம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link