News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மக்களுக்கு கோடை பரிசு 2 ஆயிரம் ரூபாயுடன் மூன்று மாத உரிமைத் தொகை 3 ஆயிரம் என மொத்தமாக 5000 ரூபாயைப் போட்டுவிட்டு, எளிதாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு கண்டார் ஸ்டாலின். அதை உடைத்துப் போடுவது போன்று எடப்பாடி பழனிசாமி இன்று 10000 ஆயிரம் ரூபாய் அறிவித்துவிட்டார்.

ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை போட்டுவிட்டு புதிதாக ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டார். ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.

மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000/- ரூபாயில் இருந்து 12,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000/- ரூபாய் வழங்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த 10 ஆயிரம் ரூபாய் எல்லா குடும்பத்துக்கும் தரப்படும் என்ற செய்தி எக்குத்தப்பாக திமுகவை திணறடித்துள்ளது. அதேநேரம், ஆட்சிக்கு வந்தால்தானே என்று எடப்பாடி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று கிண்டல் செய்கிறார்கள்.

இந்த இருவரும் இப்படி போட்டி போடுவதைப் பார்த்து விஜய் தேர்தல் அறிக்கையில் என்ன அறிவிக்கப்போகிறாரோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link