News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உணரப்பட்டதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

வங்கக்கடலில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி என்ற பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமான தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக வங்காள விரிகுடாவில் இன்று காலை 9.38 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நேற்று (செப்.24) அந்தமான் கடலின் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்று நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link