Share via:
நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு
இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா
மட்டும் தான்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும்
அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது
மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான
நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
அவர்கள் அளிக்கும் ஜீவன் முக்த வாழ்க்கை முறையை வாழுங்கள். ஜீவன் முக்த வாழ்க்கையை
வாழ கைலாஸாவின் இ-குடியுரிமை பெறுங்கள். உலகில் இந்துக்களுக்கான முதல் தேசமான கைலாஸாவின்
பாகமாக ,இ-குடியுரிமை பெற, இப்போதே பதிவு செய்யுங்கள்’ என்று பதிவு செய்யக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாலியல் குற்றவாளி பிரிஜ்வல் போன்று நாட்டை விட்டு ஓடிப்போன நித்தியை
இதுவரை காவல் துறை கண்டுபிடித்து கைது செய்யாத காரணத்தால், இந்திய அரசுக்கே சவால் விடும்
வகையில் கைலாசா நாட்டுக்கு இ-விசா கொடுக்கிறார். ரஞ்சிதாவைப் பார்க்கலாம் என்ற ஆசையில்
யாரும் நுழைந்து அப்ளை செய்துவிடாதீர்கள். எப்படியாவது வங்கிக் கணக்கில் இருக்கும்
பணத்தை சுருட்டி விடுவார்கள், ஜாக்கிரதை.