Share via:
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்த பிறகு விஜய்யின் அடுத்த நகர்வு குறித்து நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சங்கரன்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ, விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவருக்கென்று எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது ஒரு கடினமான உலகம். நச்சு நிறைந்த அரசியல் என்ற அரசியல் என்று சொன்னது போலவே, விஜய்யும் அரசியலை விஷப்பாம்பு என்று சொல்லி இருக்கிறார்.
மதவாத சக்திகள்தான் விஷப்பாம்பு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அவை வேறூன்றக் கூடாது. அதற்கு விஜய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ துணை போய்விடக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார். மேலும் விஜய் படித்தவர் விவரமானவர் நல்ல முடிவு எடுப்பார் என்றும் துரை வைகோ பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.