Share via:
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் வீசிய காற்றில் துர்நாற்றம் வீசி மக்கள் அவதிப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் டாக்ரோஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் புதிதாக கட்டியுள்ள எம்.பி.பி.பிளாண்ட் இரண்டாவது தளத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு ரசாயன ரிக்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அளவுக்கதிமாக துர்நாற்றம் வீசி மக்கள் அவதிப்பட்டனர்.
மேலும் அளவுக்கதிமான புகைவெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. சம்பந்தப்பட்ட தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேளாண் உற்பத்தி சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.