News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருடன் பா.ம.க.வின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

தமிழகத்தில் ஜாதிரீதியிலான கணக்கெடுப்புக்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்ததாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படியென்றால், கண்டிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையே நடந்தது என்று கோட்டை வட்டாரம் தெரிவிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பா.ஜ.க. தனி அணியாகவும் அ.தி.மு.க. தனி அணியாகவும் நின்று தங்கள் பலத்தைக் காட்ட விரும்புகின்றன.

இந்த நிலையில் எந்த அணிக்குப் போனாலும் தோல்வி உறுதி என்பதை ராமதாஸ் உணர்ந்திருக்கிறார். ஆகவே, அன்புமணிக்கு ஒரு சீட் கேட்டு உறுதிபடுத்தவே இந்த சந்திப்பு என்றும் அதனாலே ராமதாஸ் நேரடியாக கலந்துகொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

அதுசரி, காரியம் ஆகணும்னா டாக்டர் எந்த அளவுக்கும் இறங்கித்தான் போவாரே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link