Share via:
தமிழக மக்கள் மனதில் அதானி குறித்து சில கேள்விகள் எழுகின்றன. அதாவது, சித்தரஞ்சன் சாலைக்கு வந்த அதானி முதலமைச்சரை சந்தித்தாரா? தமிழ்நாட்டில் அதானி செய்த 3000 கோடி ஊழல் புகாரில் எஃப்.ஐ.ஆர். போட முதலமைச்சர் அனுமதி கொடுப்பாரா? தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்து முதலமைச்சர் விசாரணை நடத்துவாரா? இவ்வளவுதான்.
இதையே ராமதாஸ் கேள்வியாகக் கேட்டார். மீடியாவும் ஸ்டாலினிடம் கேட்டார்கள். இதற்கு துறை அமைச்சர் ஏற்கனவே பதில் அளித்து விட்டதாகவும் விஷயத்தை டுவிஸ்ட் செய்ய வேண்டாம் என்றும் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதானியின் சித்தரஞ்சன் சாலை சந்திப்பு பற்றி எந்த விவரங்களும் இது வரை சொல்லவில்லை என்பதே உண்மை. அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பற்றி கேட்டதுமே, அவருக்கு வேறு வேலையில்லை என்று கிளம்பிவிடுகிறார்.
அதானி என்ற பெயரைக் கேட்டதுமே ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார்..? அதானியின் சந்திப்பில் எந்த தவறான நோக்கமும் இல்லை என்றால் அது குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன பயம்..?
பிரதமர் மோடி ஒரு பக்கம் அதானி குறித்து எந்த விளக்கமும் சொல்லாமல் விசாரணையும் செய்யாமல் விஷயத்தை திசை திருப்புகிறார். அதே வழியில் ஸ்டாலினும் செல்கிறார் என்றால் இருவருமே அதானியின் கூட்டாளிகளா..?
இந்த விஷயத்தில் கேள்வி கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பதில் சொல்லுங்க ஸ்டாலின்.