Share via:
கோவிஷீல்டு மருந்து என்றாலே அது பக்கவிளைவு கொண்டது என்பதை அனைவரும்
புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் இப்போது மருத்துவர்கள் கூறிவரும் கருத்து.
பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது. எல்லா மருந்துகளிலும்
அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும்.
பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள்.
முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல்
போன்றவை சில மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும்
அளவை மீறினால் அந்த மருந்தே பல பிரச்சனைகளை தரும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.
தடுப்பூசியால் வெகு சிலருக்கு (லட்சத்தில் எவரேனும் ஒருவருக்கு)
பாதிப்பு வரலாம், அதுவும் ஊசி போடபட்ட 5 முதல் 30 நாட்களுக்குள் வரலாம். அப்படி வந்தவர்களுக்கும்
முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று மூன்று வருடங்களுக்கு முன்
போடபட்ட ஊசியால், இவ்வளோ வருடம் கழித்து இரத்தம் கட்டாது. ஒரு சில ஊடகங்கள், அரைவேக்காடுதனமா
தலைப்பு போட்டு, மக்களுக்குள் பயத்தை விதைக்கிரார்கள்.
அறிவியிலிலும், மருத்துவத்தில் அரசியல், மதம், இனம் கலக்க கூடாது.
உடல் நல குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். தேவையற்ற அச்சம் உடல் நலத்தைக்
கெடுத்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.