Share via:

அண்ணா பல்கலை மாணவி
பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை படிக்கும் ஒவ்வொரு
நபரையும் அதிரவைக்கிறது. மாணவி நண்பருடன் தனியே இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும்
பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான்.
மாணவியின் செல்போனை
பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ
அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும்
அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை சமூகவலைதளங்களில் பதவிட்டு
விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான்.
இந்த மாணவி தைரியமாக
போலீஸில் புகார் சாட்டியதை அடுத்தே இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது. இதையடுத்து
அந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன்,
சில ஆண்டுகளுக்கு முன் மற்றொரு மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் என்ற தகவல்
வெளியாகியுள்ளது. அப்படிப்பட்ட ஒருவன் எப்படி வெளியே வந்தான்.
ஏற்கெனவே குற்றம்
செய்த அண்ணா பல்கலைக்குள், அதே பல்கலை மாணவியை இவ்வளவு கொடூரமாக வன்கொடுமை செய்ய அவருக்கு
தைரியம் எங்கிருந்து வந்தது? ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட வழக்குகள் அவருக்கு எதிராக உள்ள
நிலையில் மீண்டும் இப்படி ஒரு கொடூரத்தை அவர் நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இவனுக்கு காவல்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் ஆதரவாக இருந்திருப்பார்கள் என்று
குற்றம் சாட்டப்படுகிறது.
அதோடு, இதுபோல் எத்தனை
மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தினான்.
வேறு யாருக்கும் அவர்களை அனுப்பிவைத்தானா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இந்திய அளவுக்குப்
புகழ் பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முறையாக கண்காணிப்பு காமிரா இல்லை என்றால்
இந்த பல்கலைக்கழகத்திற்கு கீழ் இருக்கும் கல்லூரிகளில் உள்ள பாதுகாப்பு எப்படி இருக்கும்..?
இன்று அந்த மாணவி
தைரியமாக புகார் அளித்ததால் மட்டுமே வெளியே தெரிகிறது. எத்தனை பேர் புகார் தராமல் இருந்திருப்பார்கள்.
டில்லி நிர்பயா போன்று அண்ணா பல்கலையில் காதலன் கண்முன்னே பாலியல் வன்புணர்வு செய்த
கொடூரத்துக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அண்ணா பல்கலை. முன்பு இந்திய மாணவர்
சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள்.
உதயநிதி, மா.சுப்பிரமணியன்
போன்றவர்களுடன் இருந்த படத்தைக் காட்டி போலீசையும்
மாணவியையும் மிரட்டினானா..? ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் இரண்டு பேர் மிரட்டியதாக
கூறப்பட்ட நிலையில், இவன் ஒருவன் மட்டுமே குற்றவாளி என்று போலீஸ் காட்டுவது உண்மையா
என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
சமூக விரோதிகளுக்கு
ஸ்டாலின் மீதோ காவல்துறை மீதோ எந்த பயமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.