திருச்சியில் நடிகர் விஜய் நடத்தயிருக்கும் மாநாட்டில் நாம் தமிழர் சீமானும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘நமது கட்சியின் மாநாட்டிற்கு மற்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டாம் தலைவா. இங்கே நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, மாநாட்டில் புகழ்பவர்கள் பின்னாட்களில் இகழலாம். ஆகவே மாநாட்டில் உங்கள் மீது மட்டுமே லைம்லைட் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துவருகிறார்கள்.

விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 10 லட்சம் பேர் திரள வேண்டும் என்று விஜய் உத்தரவு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், திருச்சி மாநாடு சுமார் 3 லட்சம் பேர் கூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க.வுக்கு எதிர் நிலையில் இருக்கும் அத்தனை வாக்குகளையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே முதல் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை வாங்க முடியும். இணைந்து செயல்படுவதற்கு சீமான் தயாராக இருப்பதால் அவரை மாநாட்டுக்கு அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருக்கிறாராம். சீமான் கையில் இருக்கும் 8 சதவிகித வாக்குகளும் தங்களுடைய 10 சதவிகித வாக்குகளும் ஒன்றுசேரும் பட்சத்தில் தேர்தலில் பெரும் புரட்சி உருவாகும் என்று நினைக்கிறார்.

ஆகவே, தனக்கு ஆதரவு அளிக்கும் சீமான், அண்ணாமலை ஆகியோருடன் களம் புகுந்தால் மட்டுமே தேர்தல் வெற்றி சாத்தியப்படும் இல்லையென்றால் விஜயகாந்த், கமல்ஹாசன் வழியில் தோற்றுவிடுவோம் என்று விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது.

தி.மு.க. இந்த முறை அதே கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது. உதயநிதி தலைமை ஏற்கிறார். எனவே, முதல் அடியிலே தி.மு.க.வை சாய்த்துவிட வேண்டும் என்று விஜய் ஆசைப்படுகிறார். அதற்கு கூட்டணி அவசியம் என்று நினைக்கிறார். ஆனால், இதை அறிந்த ரசிகர்களும் நிர்வாகிகளும், ‘சீமானை சேர்க்க வேண்டாம். வெற்றி அவரால் கிடைத்தது என்று சொந்தம் கொண்டாடுவா. நாமே ஜெயித்துவிடலாம்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கோட் படம் வெற்றிக்குப் பிறகே அத்தனை முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் அதுவரை அமைதி காக்குமாறும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஐ.ஏ.எஸ். ஐ.,பி.எஸ். ஆபிசர்கள் விஜய் கட்சியில் சேரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுவது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link