News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கூட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே ட்ரம்ப் குனிந்தார். ஆனாலும், அவர் காதை துப்பாக்கிக் குண்டு துளைத்ததில் ரத்தம் சொட்டத் தொடங்கியது.

சம்பவ இடத்தில் நடந்தது குறித்து, ‘’அடுத்தடுத்து நான்கு துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டது, கூட்டம் அலறியபடி கீழே குனிந்ததும் ட்ரம்பும் அப்படியே கீழே குனிந்தார். பின்னர் ரகசியப் பிரிவினர் முடிந்தவரை அவரைப் பாதுகாத்தனர். ஒரு நபர் தப்பியோடினார். ராணுவ சீருடையில் இருந்த அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்தனர்.  அதன் பிறகு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் இன்னமும் அவரது அடையாளம் மற்றும் நோக்கம் தெரியவில்லை. அதோடு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்தார், மேலும் இரண்டு பார்வையாளர்கள் காயமடைந்தனர்’’ என்று பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துப்பாக்கிச் சூடு குறித்து விரைவான உதவிக்கு அமெரிக்க ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத்துறைக்கு நன்றி. இது போன்ற செயல் நம் நாட்டில் நடப்பது நம்பமுடியாதது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை, அவர் இப்போது இறந்துவிட்டார். ஏதோ தவறு நடக்கிறது என்று எனக்கு உடனடியாகத் தெரிந்தது, ஏதோ ஒரு சத்தம், குண்டுகள் சத்தம் கேட்டது, உடனடியாக தோட்டா தோலில் கிழிப்பதை உணர்ந்தேன்.  அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது, அதனால் என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். ’’ என்றவர் கூட்டத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்றொருவருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

ட்ரம்பின் போட்டியாளரும் அமெரிக்க அதிபருமான ஜோ பிடன், இந்த வகையான வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை, என்றார்.
 முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்தினார், நம் ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை, என்றார்.

இந்த வன்முறைச் செயலுக்கு பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அதிர்ச்சியும் கடுமையான கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link