Share via:
இன்று தி.மு.க. இளைஞரணி 45ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், ‘இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும்
தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல்
எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக
வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்’’ என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உறுதி என்று கூறிவந்தார்கள்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, ‘’பத்திரிகைகளில்
வரும் செய்தி எல்லாம் வதந்தி மட்டும் தான். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக
இருப்போம். நான் எந்த பதவிக்குப் போனாலும், என் மனதுக்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் என்பது மட்டும் தான்’’ என்று தெரிவித்து வதந்திகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ஆனால், இது முற்றுப்புள்ளி அல்ல என்று தி.மு.க.வினரே தெரிவிக்கிறார்கள்.
அதாவது, ‘என்ன பதவி வந்தாலும்’ என்று சொல்லியிருப்பதில் இருந்தே அவருக்கு புதிய பதவி
வரப்போகிறது என்பது தெரிகிறது. அமைச்சரவை மாற்றம் உறுதி. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைப்பதுடன் கோவி
செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக மாறுகிறார்கள்
என்று சொல்கிறார்கள்.