Share via:
ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டது.
ஆனால், விஜய்யை அப்படி செய்ய முடியாது. விஜய் யாருக்கும் பயப்பட மாட்டார் என்று ஆதவ்
அர்ஜூனா பேசிய விவகாரத்தின் பின்னணியில் த்ரிஷா விவகாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம், விஜய் பேசியதன் அடிப்படையிலே ஆதவ் இப்படி பேசியிருக்கிறார்
என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரஜினியை எல்லா வகையிலும் முந்திவிட்டதாக காட்டவேண்டும்
என்கிற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் “லியோ” சினிமா
விழாவில் வம்படியாக விஜய் “காட்டுல காக்கா கழுகு இருக்கும்” என சொல்லி நக்கலடித்து
மைக்கை சுற்றிவந்ததும். அதன் நீட்சியாக, அரசியலிலும் ரஜினி செய்யாததை தான் செய்துவிட்டது
போல காண்பிக்க விஜய் சில அரசியல் கூட்டங்களில் ரஜினியை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
இப்படி பொதுவாகவே விஜய்க்கு இருக்கும் எண்ணம்தான் அவரது கட்சியின்
அடுத்த கட்ட நிர்வாகிகளின் பேச்சிலும் எதிரொலிக்கிறது. ஆதவ் அர்ஜுனாவின் “ரஜினிக்கு
விஜய் போல் மனவலிமை இல்லை” என்கிற பேச்சு முழுக்க முழுக்க விஜய் கட்டமைக்க விரும்பும்
பிம்பத்துக்கான உத்திதான். இதில் விஜய்க்கு தொடர்பு இல்லாதது போல் பேசுவது அறியாமை
அல்லது விஜய்யை புனிதராக காட்டும் முயற்சி…’’ என்கிறார்கள்.
அதேநேரம் இப்போது ரஜினியை கிண்டலடிப்பதும் வம்பிழுப்பதும் தேவையில்லாத
விஷயம். வருமான வரித்துறை சோதனைகள், சிபிஐ நெருக்கடிகள், தணிக்கை வாரியக் கெடுபிடிகள்
என ஒன்றிய அரசால் பலமுறை நசுக்கப்பட்டும், நேரடியாக பாஜகவைச் சுட்டிக்காட்டி கண்டிக்க
விஜய்க்குத் துணிவில்லை.
ஒன்றிய அரசை எதிர்க்கத் தைரியம் இல்லாத விஜய், தன் அரசியல் இருப்பைக்
காட்ட திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்குவது அவரது அரசியல் கோழைத்தனத்தையே காட்டுகிறது.
கடந்த வாரம் பெலிக்ஸ், நடிகர் அஜித்தின் கார்
பந்தய ஆர்வத்தை மிகத் தரம் தாழ்ந்த முறையில் பேசியது அருவருப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி
கமல்ஹாசனையும் மக்கள் நீதி மய்யத்தையும் கொச்சைப்படுத்தும் ஆதவ் அர்ஜுனா, தற்போது சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தையும் விட்டுவைக்கவில்லை. வேண்டுமென்றே பேசியிருக்கிறார்.
இப்போது ரஜினி விவகாரம் பரபரப்பானால் மக்கள் த்ரிஷா விவகாரத்தை
மறந்துவிடுவார்கள் என்பதற்காகவே இப்படி பேசியதாகச் சொல்லப்படுகிறது. இப்படியெல்லாம்
பேசுவதால் மட்டும் த்ரிஷா விவகாரத்தை மறைத்துவிட முடியாது.
