Share via:
இரட்டை மொழி மட்டுமே
போதும் என்று நடிகர் விஜய் குரல் கொடுத்ததும் அவர் நடத்தும் பள்ளியில் மும்மொழிக் கொள்கை
இருக்கிறது என்று அண்ணாமலை ஆவணம் வெளியிட்டார். அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு
எதிராகவும் புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை,
‘’திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள்
வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான்
மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும்
Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திருமாவளவன்
தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள்
அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில்
இருப்பது ஏன்?
தனியார் மருத்துவக்
கல்லூரிகளை வைத்திருப்பவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியது போல, CBSE பள்ளிகளை
வைத்திருப்பவர்கள் இப்போது மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறார்கள். இதிலிருந்து
இது சாமானிய மக்களுக்கான திட்டம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து பா.ஜ,க.வினர்,
‘’எல்லா பிராடுகளும் வெளியில வந்து அரசு பள்ளிகளில் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்று
சொல்லிட்டு மறைமுகமா தனியார் CBSE பள்ளி நடத்தி இந்தி கற்று தராங்க. ஏழைகள் எப்போதும்
ஏழைகளாக இருக்க வேண்டும் இவர்கள் மட்டும் ஏழைகளை பயன்படுத்தி கோடி கோடியாக கொள்ளையடிக்கனும்
அதானே?’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இதுவரை இதற்கு விடுதலை
சிறுத்தைகளும் திருமாவளவனும் பதில் சொல்லவில்லை என்பது தான் அதிர்ச்சியான தகவல்.