Share via:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நேரத்தில் இதற்கென நேரில் வந்து, ‘கூட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியது எனக்குத் தெரியும்’ என்று தேவையே இல்லாமல் கருத்து சொல்லி சலசலப்பு ஏற்படுத்தினார். பின்னர் அவரே விசாரணை ஆணையத்தில் பல்டி அடித்தது வேறு விவகாரம்.
இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி கன்னியாகுமரி ஏரியாவில் தான் டேரா போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்துக்கொண்டுதான் காரில் போகிறார். ஆனால், மனசாட்சி உள்ள மனிதனாக அவர் நடந்துகொள்ளவே இல்லை. பாதிக்கப்பட்ட ஒரே ஒரு மனிதருக்குக் கூட உதவி செய்யவில்லை, ஆறுதலும் சொல்லவில்லை.
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் இல்லையா என்று பாடுவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ரஜினி, உண்மையாகவே மக்களை நேசிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களே வருத்தமும் வேதனையும் படுகிறார்கள்.

