News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் முதலிடம் பிடித்துள்ள விவகாரம் செம வைரலாகிவருகிறது. இவரது சொத்துக்களை கணக்கிட்டால் எங்கேயோ போகிறது. இவரை முதல்வர் ஆக்கிவிட்டால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் இவரே கவனித்துக்கொள்வார் என்று கிண்டல் செய்கிறார்கள்.  

திருச்சி மாவட்டம் லால்குடியில் போட்டியிடும் லீமா ரோஸ் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 863 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவரது தனிப்பட்ட மதிப்பு 1,048 கோடி ரூபாய்.  கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அவருக்கு சீட் கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அசையும் சொத்துக்கள்: 50,86,546.75 (வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் இதர சேமிப்புகள் உட்பட).

அவருக்குச் சொந்தமாக அசையா சொத்துக்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பெயரில் விவசாய நிலங்கள் எதுவும் இல்லை, தங்கம்: 100 கிராம் தங்க நகைகள் (மதிப்பு சுமார் 11.25 லட்சம்).

அவர் பெயரில் வாகனங்கள் எதுவும் இல்லை. கடன்: 17,00,000 தனிநபர் கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனைவி ராதா பெயரிலுள்ள அசையும் சொத்துக்கள்: 2,16,15,927. அசையா சொத்துக்கள்: 3.45 கோடி (6 இடங்களில் நிலம் மற்றும் பண்ணை வீடு உட்பட). மொத்த சொத்து மதிப்பு: 5.61 கோடி. தங்கம்: 720 கிராம் தங்க நகைகள் (மதிப்பு சுமார் 81 லட்சம்). எடப்பாடி பழனிசாமிக்கு பூர்வீக சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், வாடகை மற்றும் மின்கட்டண நிலுவைகள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடேங்கப்பா…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link