Share via:
லண்டனுக்குப் படிக்கப்போயிருக்கும் அண்ணாமலை கட்சி விவகாரங்களில்
தலையிட மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில், ‘யாரும் சரியாக உழைக்கவில்லை, கடுமையாக
உழைக்க வேண்டும்’ என்று ஹெச்.ராஜாவை ஓவர்டேக் செய்து வீடியோ வெளியிட்டிருப்பது சீனியர்களை
கொதிக்க வைத்திருக்கிறது.
அண்ணாமலை திரும்பிவருவதற்குள் கட்சிப் பணியில் விறுவிறுப்பைக்
காட்டி அரசியல் மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்று ஹெச்.ராஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதற்காக அமித்ஷா தொடங்கி அத்தனை மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.
மேலும் உறுப்பினர் சேர்க்கையில் சாதனை படைத்துவருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹெச்.ராஜாவின் பணியை விமர்சிக்கும் தொனியில் வீடியோ பதிவு செய்திருக்கிறார்
அண்ணாமலை.
அந்த வீடியோவில், ‘கடந்த சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் மிகக்
கடுமையாக களத்தில் உழைத்து கொண்டிருக்கிறீர்கள். பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக,
புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக, நம்முடைய குடும்பத்தை இன்னும் வேகப்படுத்துவதற்காக
உழைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கக்கூடிய கோரிக்கை,
நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஏனென்றால் நமது இலக்குமிகப்பெரிய இலக்கு. தமிழகத்தில்பாஜகவின்
வளர்ச்சியை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் அன்பு பாஜகவின் பக்கம்
வர தொடங்கியிருக்கிறது. நிறையபேர் நம்முடன் இணைய வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய
இலக்கை மிகத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 200 பேரை கட்சியில்
சேர்க்க வேண்டும். இது பெரிய இலக்காக இருந்தாலும், நிச்சயம் இது நம்மால் செய்து காட்டக்கூடிய
இலக்கு தான்.
ஒரு நாளில் மண்டல அளவில் 500 பேர் பாஜகவில் இணைந்தால் மட்டும்தான்
குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை எட்ட முடியும். தினமும் கட்சியில் இணையும் முதியவர்களுக்கு
நேரம் ஒதுக்குங்கள். இலவச செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வையுங்கள். அவர்களது
விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது,அதில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் நமக்கு மிக முக்கியம். இந்திய அளவில் அதிகளவிலான உறுப்பினர்கள் தமிழக
பாஜகவில் இருக்க வேண்டும். தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு அனைவரும்
முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.’’ என்று கூறியிருக்கிறார்.
இதன் அர்த்தம் ஹெச்.ராஜாவுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம்
என்பது தான் என்று அண்ணாமலை வார் ரூம் சொல்கிறார்கள். ஹெச்.ராஜாவுக்கு இந்த அசிங்கம்
தேவையா..?