Share via:
சென்னையில், மருத்துவர்
பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை
நிறுத்தம் அறிவித்து புறக்கனிப்பு செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 45,000
மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம்
போல் செயல்படுகிறது இதையடுத்து புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நோயாளிகள் கடும் அவதிக்கு
ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அரசு
என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு தனி மனிதனின்
கோளாறு என்பதை மக்களும் மருத்துவர்களும் குறிப்பாக மீடியாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
தனி மனிதனின் கோபத்தை ஒட்டுமொத்த மருத்துவத் தோல்வியாகக் காட்டுவது பெரும் சிக்கலில்
போய் முடியலாம்.
பொதுவாக நோயாளிக்கு
வரும் நோய், அவரது உடல் இருக்கும் நிலையைப் பொறுத்தே குணமடையும். எல்லா நேரமும் ஒரு
நோயாளியுடன் டாக்டரும், நர்ஸும் இருக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
இனி, மருத்துவமனை
எந்த
அரசு அலுவலகம், நீதிமன்றம், மருத்துவமனைகளுக்குள் சென்றாலும் மெட்டர் டிடெக்டர் பரிசோதனை
உண்டு. அடையாளஅட்டை கையில் வைத்திருக்க வேண்டும். விசிட்டர் புத்தகத்தில் பெயர், மொபைல்
எண் எழுதி கையொப்பம் இட வேண்டும். சிசி டிவியில் முகம் தெரியும்படிதான் உள்ளே நுழைய
அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு அச்சம் இல்லை என்றாலும் கூட, பார்வையாளர்களின்
வருகையைப் பதிவு செய்து விசிட்டர் பாஸ் வழங்கும் நடைமுறை கூட இல்லாமல் இருப்பது இனியும்
நியாயமில்லை. முதல்கட்டமாக தினமும் 1000 பேர்களுக்கு மேல் பார்வையாளர்கள் உள்ளே வரும்
அத்தனை அலுவலகங்களின் பாதுகாப்பு பொறுப்பினையும் தகுதியுள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
சென்னையின் மையத்தில் உள்ள பொது மருத்துவமனைக்குள் ஒருவன் கத்தியை
கொண்டு சென்று விட முடியும் என்பது பாதுகாப்புக் குறைபாடு. எனவே, அரசு இனியாவது விழித்துக்கொள்ள
வேண்டும். மேலும், ஒரு சம்பவத்துக்காக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி மக்களுக்கு
இடையூறு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை மருத்துவர்களும் புரிந்துகொண்டு பணிக்குத்
திரும்ப வேண்டும்.