Share via:
ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளர் போன்று
நின்று, படுமோசமாக தோற்றுப்போன ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தொடர் வெற்றியை
விமர்சனம் செய்திருப்பது அ.தி.மு.க.வினரை கோபமூட்டியுள்ளது.
பிரதமர் மோடிக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து
ஆதரவு தெரிவித்துவரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது அ.தி.மு.க.வில் மீண்டும் நுழைந்துவிட
வேணும் என்று துடிக்கிறார். அதேநேரம், அவருக்கு சொந்த செல்வாக்கும் இல்லை, அவரது சமூகத்திலும்
செல்வாக்கு இல்லை என்பதை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அவரை சேர்ப்பதற்கு விரும்பவில்லை.
ஆனாலும், மீண்டும் மீண்டும் ஒருங்கிணைப்பு பற்றி பேசிவருகிறார்
ஓ.பன்னீர்செல்வம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டி உருவாக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.
எனும் மாபெரும் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்டு பதினோராவது தொடர்
தோல்வியை வரவு வைத்துக்கொள்வதா இல்லை ஒன்றுபட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற
கம்பீர முடுக்கோடு கட்சியைக் களமிறக்கி 2019ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய
வெற்றியை மீண்டும் நிலைநாட்டி, கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப்போகிறோமா என்ற
ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது’’ என்று கேட்டுள்ளார்.
இவரது வேண்டுகோளை எடப்பாடி டீம் கொஞ்சமும் மதிக்கவே இல்லை. ‘’வேண்டுமென்றால்
மீண்டும் பலாப்பழ சின்னத்துடன் விக்கிரவாண்டியில் நின்று ஜெயித்துக் காட்டலாமே? கதவு
மூடப்பட்டது என்று தெரிந்த பிறகும் எப்படித்தான் இப்படி மீண்டும் மீண்டும் தட்ட முடிகிறதோ’’
என்று கேலி செய்கிறார்கள்.
இந்த கேலியை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டால் அரசியல் செய்ய
முடியுமா என்று கேட்கிறது பன்னீர் தரப்பு.