Share via:
கடந்த 2021 தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக
அறிவித்துவிட்டு, அமைதியாக இருந்தார் சசிகலா. அதேபோல் இந்த 2024 தேர்தலிலும் நேரடியாக
யாருக்கும் ஆதரவு கொடுப்பதாகச் சொல்லவே இல்லை.
இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம்,
‘சசிகலாவின் ஆதரவு எங்களுக்குத்தான். பா.ஜ.க.வை ஆதரிக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டு
இருந்தார். டி.டி.வி. தினகரன் சசிகலா பெயரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும்
அவரது ஆதரவு தங்களுக்கே உள்ளது என்று பேசிவந்தார்.
ஆனால், சசிகலா நடத்திவரும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் நாடாளுமன்றத்
தேர்தலுக்கான தன்னுடைய ஆதரவை வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமிக்குத் தருவது போன்று அறிவிப்பு
செய்திருக்கிறார்.
அந்த அறிவிப்பில், ‘நமது இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது
பதவிகளை தட்டிப்பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் கவலைப்படாதீர்கள்.
இவர்கள் எண்ணம் தவறாது. இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது’
என்று கூறியிருக்கிறார்.
அதோடு, ‘உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு நம் இயக்கம் சீரோடும்
சிறப்போடும் செழித்திருக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது.
அதேபோன்று இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே
இயங்கும் என்று சூளுரைத்த நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும்’
என்று தெரிவித்திருக்கிறார்.
அவரது கருத்துப்படி, ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கே
ஆதரவு கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் டிடிவி தினகரன், பன்னீர் குரூப்புக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடி டீம் சந்தோஷத்தில் குதிக்கிறார்கள்.