Share via:
போயிங் கோ நிறுவனமானது தனது நிறுவணத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது .மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் புதன்கிழமை தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ் வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதமே, போயிங் நிறுவனம் 10 சதவீதம் ஆள்குறைப்பில் ஈடுபட விருப்பதாக அறிவித்திருந்தது. இது கிட்டத்தட்ட 17 ஆயிரம் என்கிறது அந்த நிறுவனம் .
கடத்த ஜனவரியில் போயிங் விமானம் விபத்துகள் , வேலை நிறுத்தம் , பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் நிறுவனத்தில் ஆள்குறைப்புக்கு காரணம் என கூறப்படுகின்றனர் .
ஒருபக்கம் போயிங் ஆள்குறைப்பில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரிஜின் எல்எல்சி, அமேசான் காம் இங்க் போன்றவை தங்களது பல்வேறு திட்டப் பணிகளுக்காக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ஊழியர்களுக்கு கவலையில்லை என்றும் கூறப்படுகிறது.