Share via:
திராவிடக் கட்சிகளின்
முதுகில் ஏறி சவாரி செய்யாமல் தனியே நின்றால் தான் பா.ஜ.க.வின் உண்மையான கள நிலவரம்
தெரியவரும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கியே கிடையாது என்று திருமாவளவன்
சவால் விட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக திருமாவளவன் தனியே நின்று அவரது செல்வாக்க
நிரூபிக்க வேண்டும் என்பதுடன் அவன், இவன் என்று ஏகவசன்ம் பேசியிருப்பது விடுதலைச் சிறுத்தைகளைக்
கொதிக்க வைத்திருக்கிறது.
இது குறித்து பா.ஜ.க.
தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’2001 லிருந்து பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான்,
அதிமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான். யார் யாருடனோ கூட்டணி வைத்து பார்த்தான்.
தமிழ்நாட்டிற்குள் வேரே பிடிக்கவில்லை. சும்மா ஏதோ அதிமுக ஒட்டு வாங்கியதால் நாங்கள்
வளர்ந்து விட்டோம் என்கிறான். நீ தனியாக நின்று பார். உன் கதி என்ன என்று தெரியும்,
உன் லட்சணம் என்ன என்று தெரியும்.
கடந்த 50 வருடங்களில்
தி மு க, அதிமுக கூட்டணியில் இல்லாத எந்த கட்சியும் 10% ஓட்டை தாண்டியதில்லை, ஆனால்
2024ல் அண்ணாமலை தலைமையிலான பாஜக 12% வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய
கட்சியாக உருவெடுத்துள்ளது. திருமாவளவனின் விசிக ஏதோ தனியாக நின்று தேர்தலில் வெற்றி
பெற்றது போல் மார் தட்டி கொள்வது வெட்கக்கேடு.
விசிக தொடர்ந்து
திமுக வுடனும், அதிமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான். தமிழ்நாட்டிற்குள் வேரே பிடிக்கவில்லை.
சும்மா ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழித்தும், பழித்தும் பேசுவதால் நாங்கள்
வளர்ந்து விட்டோம் என்கிறான். 2016ல் பாஜகவும், விசிகவும் திமுக, அதிமுக கூட்டணியில்
இடம்பெறவில்லை. ஆனால், விசிக வை விட பாஜக வாங்கிய ஒட்டு நான்கு மடங்கு அதிகம்.
சவால் விடுகிறேன்,
விசிகவே நீ தமிழகத்தில் தனியாக நின்று பார், உன் கதி என்னவென்று தெரியும், உன் லட்சணம்
என்னவென்று தெரியும். திமுகவின் அடிமைகளுக்கு, அடிவருடிகளுக்கு பாஜக குறித்து விமர்சனம்
செய்ய எந்த தகுதியும் இல்லை…’’ என்று கொதித்திருக்கிறார்.
திருமாவளவனை அவன்
இவன் என்று ஏகவசனத்தில் பேசியிருப்பது எக்கச்சக்க எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது. இதற்கு
விடுதலை சிறுத்தைகள், ‘’பா.ஜ.க. தனியே நின்று 12% வாக்கு வாங்கவில்லை. பாமக இல்லைனா
வட மாவட்டங்களில் பல தொகுகளில டெபாசிட்டே தேறி இருக்காது உன் கட்சிக்கு.. தென் மாவட்டங்களில்
தினகரன் ஓபிஎஸ். கட்சிகளோட கூட்டணி, மத்திய மாவட்டங்களில் ஏசிஎஸ், பாரிவேந்தர், இந்த
மாதிரி கட்சிகளை பொருக்கி தான் இந்த 12% ஓட்டே. இதை சாதனைன்னு சொல்லலாமா? வீண் பெருமை
பேசாமல் தனியே நில்லுங்க’’ என்று போட்டு பொளந்து வருகிறார்கள்.