Share via:

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு இணையாக காளியம்மாளுக்கு வரவேற்பு
கிடைக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்ததாலே, அவரை பிசிறு என்று மட்டம் தட்டினார் சீமான்.
அதன் பிறகு சீமானுடன் காளியம்மாள் மீட்டிங் நடந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒற்றுமை
ஏற்படவில்லை.
இந்த நிலையில் விழா அழைப்பிதழ் ஒன்றில் காளியம்மாளின் பெயர், நாதக
பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரே நாம் தமிழர் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் குறிப்பிட வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டதாக செய்திகள் பரவின.
இதையடுத்து காளியம்மாளிடம் கேட்டதற்கு, ‘’நான் கட்சியிலிருந்து
வெளியேறுவதாக பலரும் எழுப்பும் கேள்விக்கு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்;
விரைவில் சொல்கிறேன்’’ என்று மழுப்பலாகவே காளியம்மாள் பதில் சொல்லி இருக்கிறார்.
சீமான் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சிக்குப் போவதாகப் பேச்சு
எழுந்தது. அதற்கான பேச்சுவார்த்தை முடிந்தும் இன்னமும் அழைப்பு வரவில்லை என்றே தெரிகிறது.
அதனாலே இன்னமும் காளியம்மாள் அமைதி காப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்கள், ‘’சீமானை விட மோசமானவர் காளியம்மாள்.
பதவிக்கு வருவதற்கு முன்பாகவே பணத்தை கோடிக்கணக்கில் குவிக்கும் பண வெறிபிடித்தவர்
காளியம்மாவை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கின்ற பெரும் தவறினை திமுக அதிமுக தவெக
செய்துவிடக் கூடாது சீமான் நாகப்பாம்பு என்றால் காளியம்மாள் கருநாகபாம்பு. அவரை கட்சியில்
சேர்க்க வேண்டாம்’’ என்று பலரும் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம். சீமான்
ஆதரவாளர்கள் சிலரும் காளியம்மாளை மட்டும் சேர்த்துக்காதீங்க என்று விஜய்க்கு கோரிக்கை
வைத்திருக்கிறார்களாம். அதனால் தான் காளியம்மாளுக்கு
இன்னமும் அழைப்பு சேரவில்லை என்கிறார்கள்.
அதேநேரம், காளியம்மாளை வரவேற்பதற்கு தி.மு.க. தயாராக இருக்கிறது.
ஆகவே, எந்த நேரமும் காளியம்மாளுக்கு அழைப்பு வரலாம். சீமான் கட்சிக்கு முழுக்கு போடுவார்
என்றே சொல்லப்படுகிறது.