News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது.

 

சென்னை நந்தனத்தில் டி.என்.பி.எஃப்.சி. (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

 

குறைவான வருமானவரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வருமானவரி சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த ஆண்டு அதிகளவில் வருமானவரி செலுத்திவிட்டு நடப்பாண்டில் குறைந்த அளவிலான வருமானவரி தாக்கல் செய்ததால் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link