Share via:
எங்களுக்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. கூட்டணியில்
இருந்து அழைப்பு வரவில்லை என்று திருமாவளவன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் என்று தி.மு.க.வினரே கொதிக்கிறார்கள்.
மூன்று தொகுதிகள் வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
பிடிவாதம் காட்டி வருகிறது! விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் காங்கிரஸ் மற்றும்
ம.தி.மு.க.வும் அதிகம் கேட்பார்கள் என்பதால் ஸ்டாலின் அமைதி காத்துவருகிறார்.
கமல்ஹாசனுக்கு கொடுக்கும் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்குக்
கொடுத்துவிடலாம் என்று கூறிவரும் நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. திருமாவுக்கு
மூன்று கொடுத்தால் காங்கிரசுக்கு எட்டு தொகுதிகளை கொடுக்க திட்டமிட்ட திமுகவிடம் காங்கிரசுக்கு
12க்கு குறையாமல் செல்வ பெருந்தகை நிர்பந்திப்பார்! ஏற்கனவே மதிமுக ஒன்று வேண்டாம்
இரண்டு வேண்டும் என பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்கிறது
தற்போதைய திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி தூக்கலாக இருப்பது,
ஒரு டஜனுக்கு மேற்பட்ட சம்பவங்களில் தமிழக காவல்துறை தலித் மக்களுக்கு எதிராக நடந்து
கொண்டது.. போன்றவற்றை பட்டியலிட்டு, ”திமுக நமது கூட்டணியை விரும்பினால் மூன்றில் உறுதியாக
நில்லுங்க. இல்லையென்றால் மாற்றை பரிசீலிப்போம்” எனச் சொல்லி உள்ளனராம்!
குறிப்பாக கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தேவையின்றி அப்பாவி தலித்
இளைஞர்கள் குறி வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வில் திமுக அரசு நியாயமாக
நடக்கவில்லை பலமுறை வேண்டுகோள் வைத்தும் முதல்வர் நியாயம் செய்யவில்லை வேங்கைவயல் சம்பவத்தில்
திமுக அரசு இன்று வரை குற்றவாளியை காப்பாற்றி பிரச்சினையை திசை திருப்பி வருகிறது.
பிரச்னைகள் நிறைய இருந்தாலும் இன்று அல்லது நாளைக்குள் முதல்வர்
ஸ்டாலின் சுமூக தீர்வு காண்பார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் அ.தி.மு.க.வும் ஆர்வத்துடன்
இதை பார்த்துவருகிறது.