Share via:
இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தமிழ் பாதுகாவலன் என்றெல்லாம் தேவையில்லாத
விஷயங்களில் தீவிரம் காட்டும் திமுகவுக்கு கீழடி விவகாரத்தில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.
கீழடி அதிகாரி மாற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுக அழுத்தம் கொடுக்கவில்லை
என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்
மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து, ‘’”கீழடி- என் தாய்மடி” என்ற
வாக்கியத்தை உருவாக்கியதே எடப்பாடி பழனிசாமிதான். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொல்லியல்
ஆய்வுக்கு ஒதுக்கிய நிதி வெறும் 9 கோடி. அடுத்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில்
தொல்லியல் ஆய்வுக்கு ஒதுக்கிய நிதி ரூ. 105 கோடி… எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தை
தேசிய அருங்காட்சியமாக மாற்றியவர்.’’ என்றெல்லாம் கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரத்திற்கு திமுகவின் எழிலன்,
‘’மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருந்த
போது ஒருநாள் கூட கீழடி வந்ததில்லை, நிதியும் ஒதுக்கவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்த விவகரத்தை அதிமுகவினர் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதிலடி கொடுக்கிறார்கள்.
இது குறித்து
பேசும் அதிமுகவினர், ‘’அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் கீழடியை பார்வையிட்ட புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. மீடியாக்கள் இருக்கும் இந்தக்
காலத்திலேயே துணிந்து பொய் சொல்கிறாரென்றால், 80,90 களில்
என்னென்னப் பித்தலாட்டம் பண்ணியிருப்பார்கள்…? இப்படித்தான் நீட்டை ரத்து
செய்வோம் என்று எவ்வளவு துணிச்சலாகப் பொய் பேசினார்கள். தில்லுமுல்லு, பித்தலாட்டம்
செய்யும் திமுக கும்பல், தமிழ்த்திரு
மண்ணிலிருந்து அகற்றபடவேண்டிய தமிழ்ச்சமூக விரோதிகளின் கூடாரம்’’ என்று சமூகவலைதளத்தில்
அடித்து விளையாடுகிறார்கள்.