Share via:
தி.மு.க. நடத்திய
கலைஞர் 100 அட்டர் பிளாப் ஆனதற்கு நடிகர் விஜய் சென்னையில் இருந்துகொண்டே வராமல் போனதுதான்
காரணம் என்று தி.மு.க. ரொம்பவே காட்டமாக இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு
முழு அளவில் இல்லையென்றாலும் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றே
தெரிகிறது.
தொடர்ந்து விஜய்க்கு
மக்களிடம் கிடைத்துவரும் ஆதரவை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திசையில்
தி.மு.க. காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. அதனால் தற்போது நடிகர் தனுஷிற்கு ஆதரவு
கொடுத்து வளர்த்துவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
தற்போது வெளியாகியுள்ள
கேப்டன் மில்லருக்காக ஓடி வந்து புரமோட் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் நடிகரும்
அமைச்சருமான உதயநிதி. இன்று அவர் எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
’ஒடுக்கப்பட்ட மக்களின்
கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை
சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ்க்கும் இயக்குனர் அருண்
மாதேஸ்வரனுக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக
அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்’ என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார் உதய்.
இதன் மூலம் ஒடுக்கப்பட்ட
மக்களின் வாக்கு வங்கியையும் தி.மு.க. குறி வைக்கிறது. அதேநேரம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு
கொடுத்துவரும் ரஜினிக்கு செக் வைக்கவும் தனுஷை பயன்படுத்துகிறது.
இந்த மூவ் சக்சஸ்
ஆகுமா..?