Share via:
திமுகவுக்கு ஆதரவாக கட்சி நடத்திவந்த சில கட்சிகளின் பதிவை தேர்தல்
கமிஷன் ரத்து செய்திருக்கிறது. குறிப்பாக மனிதநேய ஜனநாயக் கட்சி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு
ஆப்பு வைத்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் திமுகவில் சேர்வார்களா அல்லது இதேபோன்று
சில்லறை இயக்கமாகத் தொடர்வதாகக் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல்
ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார். அவர், ’தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக கடந்த
2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மனிதநேய ஜனநாயக கட்சி
நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக, அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் மஜக போட்டியிட்டது.
மேலும், தமிழகத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சி ஈடுபட்டு
வருகிறது.
தமிழகம் முழுவதும் நிர்வாக கட்டமைப்போடும் மக்கள் செல்வாக்கோடும்
இயங்கி வரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் செயல்
கண்டனத்திற்குரியது. தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரே காரணத்தைக் கொண்டு கட்சியின்
பதிவை ரத்து அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது.’ என்று குரல் எழுப்பியிருக்கிறார்.
இந்த நடவடிக்கை திமுகவுக்கு ரொம்பவே சாதகமாக மாறவே வாய்ப்பு என்கிறார்கள்.
நிலைமையைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 42 கட்சிகளின் பட்டியல்
இதோ.
1.அகில இந்திய ஜனநாயக் கட்சி
2.அகில இந்திய பார்வர்ட் பிளாக் (சுபாஸிஸ்ட்)
3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வுக் கட்சி
4.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
5.அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம்
6.அகில இந்திய சத்திய ஜோதி கட்சி
7.அகில இந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
8.அனைத்து மக்கள் நீதிக்கட்சி
9.அன்பு உதயம் கட்சி
10.அன்னை மக்கள் இயக்கம்
11.அனைத்திந்திய தொழிலாளர் கட்சி
12.அண்ணன் தமிழக எழுச்சிக் கழகம்
13.டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்
14. எழுச்சி தேசம் கட்சி
15. கோகுல மக்கள் கட்சி
16. இந்திய லவ்வர்ஸ் கட்சி
17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
18. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி
19. மகாத்மா காந்தி தேதிய தொழிலாளர் கட்சி
20. மக்கள் தேசியக் கட்சி
21. மக்கள் கட்டமைப்பு கட்சி
22. மக்களாட்சி முன்னேற்றக்கழகம்
23. மனிதநேய ஜனநாயக கட்சி
24. மனித நேய மக்கள் கட்சி
25. பச்சை தமிழகம் கட்சி
26. பெருந்தலைவர் மக்கள் கட்சி
27. சமத்துவ மக்கள் கழகம்
28. சிறுபான்மை மக்கள் நலக்கட்சி
29.சூப்பர் நேசன் கட்சி
30.சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்
31. தமிழ்நாடு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்
32. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
33. தமிழர் தேசிய முன்னனி
34. தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி
35. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி
36. தமிழர் முன்னேற்றக் கழகம்
37. தொழிலாளர் கட்சி
38. திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
39. உரிமை மீட்புக் கழகம்
40. வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி
41. விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம்
42. விஜய பாரத மக்கள் கட்சி