Share via:
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்து நிறுத்தியது தி.மு.க.தான் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் பா.ம.க. சார்பில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘‘சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கிடைத்த 3 வாய்ப்பையும் தி.மு.க. தான் கெடுத்துவிட்டது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தி.மு.க.வுக்கு மனம் இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருகிறார். உறங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் உறங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்’’ என்று கடுமையாக விமர்த்து பேசினார்.