Share via:
ராமதாஸ்க்கு வேற வேலை இல்லை என்று ஸ்டாலின் சொன்னதையடுத்து வட தமிழகமே குலுங்கும்
என்று பா.ம.க.வினர் பயமுறுத்தினாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து பேசிய
ராமதாஸ், ‘ஸ்டாலினுக்குப் போல் எனக்குப் பிரகாசமான அரசியல் ஞான ஒளி இல்லை என்ன செய்வது?’
என்று கிண்டல் செய்திருந்தார்.
அதோடு ராமதாஸும் அன்புமணியும் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்று
காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில்
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி
பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000
இழப்பீடு வழங்க வேண்டும் என
ராமதாஸ் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதேபோல் அன்புமணி
ராமதாஸ், ’12 லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்துடன்
பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை
கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி
பதவியில் அமர்த்துவதா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நேற்றைய தினம் ராமதாஸ்,
‘’ தெலுங்கானாவில் கடந்த 6-ஆம் நாள் தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் சமூகநீதியைக் காப்பதில் அம்மாநில காங்கிரஸ் அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது. அதுபோல் ஸ்டாலின் உடனே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை
என்றால் வி.பி.சிங் ஆன்மா மன்னிக்காது’’ என்று தெரிவித்திருந்தார்.
ராமதாஸ் புடுங்குவது
எல்லாமே தேவையில்லாத ஆணிகள் என்பது போன்று அவரது அறிக்கைக்கு தி.மு.க. நெத்தியடி கொடுத்திருக்கிறது.
இதற்கு
தி.மு.க.வினர், ‘’தெலுங்கானாவில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு BC : 29% SC +ST
:21 ஆக மொத்தம் 50%. அது போக EWS : 10%. தமிழ்நாட்டில் ஏற்கனவே 69% நடைமுறையில் உள்ளது.
அதில் BC & MBC க்கு மட்டும் 50%. சமூகநீதிக்கு தெலுங்கானாவை உதாரணம் காட்டும்
டாக்டர் அவர்களே! அவர்களைப் போல நாமும் 10% EWS அனுமதிக்கலாமா?
இந்திரா சஹானி தீர்ப்புக்குப் பிறகு இப்போது இருக்கும் 69% ஐ காப்பாற்றுவதே பெரும்
சவால் என்பது உங்களுக்குத் தெரியாதா? மாநில அரசு எடுக்கும் சர்வே டேட்டா கொண்டு எவ்வித
மாற்றமும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதும் உங்களுக்குத்
தெரியாதா? 5. 2021 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய சென்சஸை எடுக்காமல், ஒட்டுமொத்த சென்சஸ்
போர்டை கலைத்து விட்டிருக்கும் பாஜகவை நோக்கி எப்போதுதான் கேள்வி எழுப்பப் போகிறீர்கள்?
சாதிவாரி கணக்கெடுப்பை கொள்கை அளவிலேயே கடுமையாக எதிர்க்கும் பாஜவுடன் கூட்டணியில்
இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை கேட்க தார்மீக உரிமை உங்களுக்கு உண்டா? என்று
நச் நச்சென கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.