Share via:
தி.மு.க. எம்.பி.க்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என்று பேசிய மத்திய
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட
தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினமே தான் பேசிய பேச்சுக்கு தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில்,
ஏன் அதே பிரச்னையை எழுப்பி கோஷம் போடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள்
எல்லாம் இருக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்கள்
தொடர்ந்து தாக்கப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர். அதுபற்றியெல்லாம் குரல் எழுப்பவில்லை,
மேகதாட்டு அணை முடிந்துவிட்டது என்று கர்நாடக முதல்வர் பேசுவதை எதிர்த்து யாரும் போராடவில்லை.
பேரிடர் நிதி தமிழகத்துக்கு தரவில்லை அதுபற்றி போராடவில்லை, நேற்றே
தன் பேச்சை மத்திய அமைச்சர் வாபஸ் வாங்கியும் இன்று போராட்டம் ஏன்? இதுதான் இவர்கள்
அரசியல். இதில் கூட்டணி கட்சிகள் வேறு இவர்களுக்கும் மக்கள் பிரச்சனை குறித்து அக்கறை
இல்லையா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழக மக்களை தர்மேந்திர பிரதான் திட்டிவிட்டதாக பொதுவெளியில்
கருத்து தெரிவித்திருக்கும் கனிமொழி, சபாநாயகரின் புகார் கொடுக்கும்போது மட்டும் தி.மு.க.
எம்.பி.க்களை விமர்சனம் செய்ததாக தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கனிமொழி
மீது எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.
இந்த போராட்டத்தை முடித்துவிட்டு, நாடாளுமன்றத்துக்குள் உள்ளே
சென்று மீண்டும் பெரும் ரகளை செய்யப்போகிறார்களாம், பார்க்கலாம்.