News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாகி பேசுவதிலும், நியாயத்திற்கு குரல் கொடுக்கும் நான், சட்ட ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வேன் என்று பேசி தமிழக இளைஞர்களால் அதிகளவு கவரப்பட்டு வருகிறார். அவரின் எளிமையான தோற்றமும், துணிச்சலான செயல்பாடுகளும் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

 

வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டினை மிகவும் பிரமாண்டமாக நடத்திட இளைஞர் அணி செயலாளர் என்ற வகையிலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் அமைச்சர் உதயநிதி பல்வேறு ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்.

 

இந்நிலையில் இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமம் அருகே இருசக்கர வாகன பிரசார பேரணியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

 

13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் மொத்தம் 183 வாகனங்கள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் அதாவது 8,647 கி.மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொண்டு சேலத்தில் வருகிற 27ம் தேதி இப்பேரணி முடிவடைகிறது.

 

இது குறித்து புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து புறப்படுகிறோம். மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களை கொண்ட ‘டி.எம்.கே.ரைடர்ஸ்&ன் வாகன பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம். இந்த பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். இது குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link