News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

இம்மாதம் (டிசம்பர்) 17ம் தேதி சேலம் மாவட்டம பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தி.மு.க. தனது பலத்தை நிரூபக்கவும், வரவிருக்கின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வியூகம் வகுக்கவும் இம்மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

 

இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. இளைஞர் அணியினர் கலந்து கொள்வதற்கான அஐனத்து ஏற்பாடுகளையும் அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி இளைஞர்கள் முன்பு உரையாற்றி வருகிறார். செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான பொறுப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கலந்தாலோசித்து வருகிறார்.

 

இந்நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை தேசிய கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link