Share via:
தமிழக வெற்றிக் கழகம் தான் 2026 தேர்தலை தீர்மானிக்க போகிறது என்று
திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளிப்படையாகப்
பேசியிருந்தார். திருப்புவனம் அஜித்குமார் அம்மாவை நேரில் சந்தித்து சலசலப்பைக் கிளப்பினார்
அஜித். இந்நிலையில் வரும் ஞாயிறு நடத்தயிருந்த அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்துக்கு
வழக்கம்போல் அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு
கொடுத்துள்ளது. அதிமுக – பாஜக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி அளித்த ஸ்டாலினின் காவல்துறை
விஜய் போராட்டத்திற்கு மட்டும் இன்னும் அனுமதி தரவில்லை என்பதை பார்க்கையில், விஜய்யைப்
பார்த்து ஸ்டாலின் பயப்படுவது நிஜம் என்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று பனையூரில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு தவெக சார்பில் பத்தாயிரம் கிராமங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்தி கட்சியின்
கொள்கைகளை பரப்புவதற்குத் திட்டமிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
அதோடு ஆகஸ்ட் மாதம் விஜய் நடத்தயிருக்கும் ரோடு ஷோ பற்றியும் ஆலோசனை
நடத்தப்படும் என்கிறார்கள். இந்நிலையில் இன்றைய தினம் போராடுவதற்கு அனுமதி கொடுக்கத்
தயாராக இருந்த நிலையில், அதிக கூட்டம் காட்டுவதற்காக ஞாயிற்றுக் கிழமையை விஜய் தேர்வு
செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. எப்படியும் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிடும் என்பதால்
போராடத் தயாராகிறார்கள் விஜய் ரசிகர்கள்.